பாலாஜி நகரில் குப்பைகள் தேக்கம் - நடவடிக்கை எப்போது?
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 43-வது வார்டு, பாலாஜி நகர் 3-ம் தெருவில் உள்ள Dumper Placer Bin பல நாட்களாக அகற்றப்படாத குப்பைகளால் நிரம்பி வழிவதால் துர்நாற்றம், கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பைகளை உடனடியாக அகற்றி, அலட்சியம் காட்டியதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Findings Today செய்தி எதிரொலி: பாலாஜி நகரில் குப்பைகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


