விழுப்புரம் பூந்தோட்டம், சாலாமேடு, வழுதரெட்டி, வி.மருதூர் உள்ளிட்ட நகராட்சி விரிவாக்க பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் பட்டா பெற முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் மற்றும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட வீடுகள் இருந்தபோதிலும், வருவாய் மற்றும் நகராட்சி பதிவுகள் முழுமையாக கம்ப்யூட்டரில் ஏற்றப்படாததால் மக்கள் அலுவலகம் தோறும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் காலதாமதம், கையூட்டு, வெளிப்படைத்தன்மையின்மை போன்ற குற்றச்சாட்டுகளும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பழைய புல எண்களுக்கு மாற்றாக வழங்கப்பட்ட டவுன் சர்வே மற்றும் நத்தம் சர்வே எண்கள் பற்றிய தகவல்கள்கூட பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் உடனடி தலையீடு செய்து விரைவான நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Prolonged non-issuance of computerised pattas in Poonthottam, Salamedu, Vazhuthareddy and V. Marudur areas of Villupuram District due to non-updation and non-uploading of Revenue and Municipal land records. Thousands of innocent residents are facing severe hardship, delay, repeated office visits and alleged corruption in obtaining computerised pattas

